Kanimozhi [file image ]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார்.
தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு தேவையான உணவுகளை நேரில் சென்று வழங்கி கொண்டு வருகிறார்.
மேலும், உணவுகளை வழங்குவதை தொடர்ந்து எம்.பி. கனிமொழி வெள்ளத்தால் வீட்டிற்குள் சிக்கி இருப்பவர்களையும் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து மீட்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ள நீரில் சிக்கி இருந்தார். வரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் எம்.பி. கனிமொழிஅனுமதித்தார்.
அந்த கர்ப்பிணி பெண்னை வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு எம்.பி கனிமொழியும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்று பெரிய உதவியை செய்தார். அவர்கள் கனிமொழிக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தனர். கனிமொழி உதவி செய்த அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…