வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு திமுக பெற்ற வாக்குகளை விட தற்போது இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2014 ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமான் 2,27,546 வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுள்ளார்.கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்று இருந்தார். பாஜக, பாமக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்றார். ஆனால், இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அதே வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,193 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு 21,650 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது.
ஒட்டுமொத்தமாக ஒப்பிடும் போது, திமுக கடந்த தேர்தலை காட்டிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளது. அதே வேளையில், அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பாதியளவு வாக்குகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…