அதிமுக ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக வழக்கு.!

Published by
murugan
  • திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக திமுக சார்பில் கூறப்பட்டு உள்ளது.
  • இதனால் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி அடுத்தமறுநாள் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 240 இடங்களுக்கு மேலாகவும் , அதிமுக 210 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.மேலும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2000 இடங்களுக்கு மேலாகவும் ,  அதிமுக 1700 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.இந்நிலையில் திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, மன்னார்குடி,  சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும்.

அதனால்  வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி ஆதிகேசவலு முன்பு அவரது இல்லத்தில் அவசர முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி ஆதிகேசவலு  தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றால் மட்டுமே அவசர வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago