தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு திமுகவின் எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் எம்.எம் அப்துல்லா தாக்கல் செய்ய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. அப்துல்லாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டதாலும், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்எம் அப்துல்லா தேர்வாகிறார். அப்துல்லா போட்டியின்றி தேர்வாவது குறித்த அறிவிப்பு வரும் 3-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை இன்று நடைபெற்ற நிலையில், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…