டிஎன்பிஎஸ்சி முறைகேடு : சட்டப்பேரவையில் விவாதிக்க மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.இதற்கு இடையில் நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில்,டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025