குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி முதனிலை & முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்த நிலையில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை விதித்தது டிஎன்பிஎஸ்சி.குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்படுகிறது என்று டிஎன்பிஎஸ் அறிவித்தது. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…