M.Pvenkatesan[File Image]
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தப்பட்டது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘இன்டேன் தானியங்கி சமையல் எரி வாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து
நிற்கிறார்கள்.
சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொண்டு வா என்று மக்களை துரத்துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா?
விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…