வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சம் காரணமாக தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
ஒருவருக்கு மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்துக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் கைகளை நன்றாக சுத்தம் செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.