மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இளம்பிள்ளை வாத நோய் தொற்றுகிறது. இது போலியோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.இந்தநோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 2010-ஆம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.பின்னர் கடந்த 2014 -ஆம் ஆண்டு போலியோ இல்லாத நாடு என்று இந்திய அறிவித்தது.
இதற்காக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த வருடமும் நாளை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.இதற்காக தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போலியோ முகாம்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது.இந்த ஆண்டு 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…