செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.!

Default Image

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுலகதக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். DPI வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குநர்கள், CEO-க்கள், DEO-க்கள் ஆலோசனை பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரிசோதனை, பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்