எட்டுவழிச்சாலை திட்டம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிசாலை திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை.
சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு நிலம் கையப்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த போது, பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகள் தரப்பில், விதிமுறைகளை மீறி மத்திய அரசு சென்னை -சேலம் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இன்று அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு காணொளி மூலம் இந்த வலக்கை விசாரிக்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025