கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார்.தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . மனு மீதான விசாரணை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…