தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சில காரணங்களுக்காக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வேட்பாளர்களுடன் வந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசாரால் லேசான தடியடி நடத்தப்பட்டது.
அதாவது போலி முகவர் அட்டை கொண்டு வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளே செல்ல முயன்றதால், அதனை தடுக்க புதிய முகவர் அடையாள அட்டை தயாரிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் அந்த அடையாள அட்டை கிடைக்க கால தாமதம் ஆகும் என்பதால் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைமையம் உள்ளே அனுமதிக்க போராட்டம் நடத்தினர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இதனால் திருவள்ளூர், சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையம் பரபரப்பாக காணப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…