சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.
திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…