#ElectionBreaking: திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகள் திமுக ஒதுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 4 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025