மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் – திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

Published by
Venu
  • உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில்  எடப்பாடி , சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து உயர்நீதிமன்றம்  வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்  என்றும் எழுத்துபூர்வமாக  அறிக்கை அளிக்க வேண்டும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால்  தேர்தல் ஆணையம் தரப்பில் அளித்த விளக்கத்தில் ,நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு திமுக தரப்பில்  சேலம், கரூர் மாவட்டங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியாக நீதிமன்றம், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்து வழக்கை ஜனவரி 20 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

1 hour ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

1 hour ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

2 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

3 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

4 hours ago