இன்று காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது .பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பற்ற பொல்லாச் செயல் என்று தெரிவித்தார். பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும் போது மின்கட்டணச் சலுகை மட்டும் அளிக்க முடியாதா?அதற்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து இன்று காலை 10 மணிக்கு காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…