வில்லங்கச் சான்று இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிலையில், வில்லங்கச் சான்று (Encumbrance Certificate – EC) இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், 19.8.21 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் கோரி பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் இ-சேவை மையங்கள் வழி நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களையும் வழிமுறைகளின்படி மின்னொப்பம் இட்டு உடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை இனி 1950-ம் ஆண்டு முதலே தமிழக அரசின் இணையதளமான https://tnreginet.gov.in/portal/ -ல் பார்க்கலாம் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஆவணங்களை பத்திரப் பதிவு – சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டணம் செலுத்திதான் பெற முடியும்.
தற்போது 1950-ம் ஆண்டு முதலே உங்கள் நிலம் தொடர்பான வில்லங்க சான்றிதழை இணையதளத்தில் பெற முடியும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…