இன்றுடன் முடிகிறது அமலாக்கத்துறை காவல்! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் செந்தில் பாலாஜி!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும். கைது சட்டவிரோதம் இல்லை. கைது செய்ய அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மேலும், செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அன்றைய தினமே அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து, மீண்டும் 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி ஆணையிட்டார். இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அன்றை தினமே இரவு புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் இருப்பதாவும் கூறப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த 200க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து, அதன்படி கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 7-ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. எனவே விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவதால், செந்தில் பாலாஜியை இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

ஆனால், எதிர்பார்த்த கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் வரவில்லை என்றால், அவருடைய காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை முறையிடவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!

காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…

47 seconds ago

இன்று சென்னை, கோவை, உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

22 minutes ago

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

31 minutes ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

10 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

10 hours ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

10 hours ago