“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

அதிமுக - பாஜக கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி  அழைப்பு விடுத்துள்ளார். 

eps chithamparam

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று சிதம்பரம் மேலவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ”திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றிற்கு கொடிக்கம்பங்கள் நட கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. இவ்வளவு அசிங்கப்பட்டு கூட்டணி கட்சிக்கு வேட்டு வைக்கும் அந்த கட்சியுடன் இவ்வளவு அசிங்கத்துடன் இருக்க வேண்டுமா?

திமுக கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள், உங்கள் தொகுதிகளை குறைத்து விடுவார்கள். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிக் கேட்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு வக்கில்லை. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக. ஆண் ஜாதி, பெண் ஜாதி மட்டுமே அதிமுகவினுடைய நோக்கம். அதிமுக மீது குறை சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. 2011 முதல் 2021 வரைக்கும் நிறைவான ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்தோம்.

வென்டிலேட்டர் பொருத்தி திமுக ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வென்டிலேட்டரை எடுத்துவிடுவார்கள், ஆட்சி முடிந்துவிடும். அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்னும் பண்ண முடியாது. பயம் என்ற சொல்லே அதிமுகவிற்கு இல்லை. அதிமுகவின் ஒரு தொண்டனைக் கூட யாராலும் பயமுறுத்த முடியாது” என்று தன் மீதான விமர்சனத்திற்கு காட்டமாக பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்