ADMK : மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவுக்கே முன்னோடி அதிமுக.! இபிஎஸ் பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 3ஆம் நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் 2ஆம் நாளாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் “நாரி சக்தி வந்தான் ஆதினியம்” மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் பணியாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மசோதவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகளே தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போது அதிமுகவும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது X சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில். “பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளித்து, பின்னர் அதையே 2016ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் மாண்புமிகு அம்மா(முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) அவர்கள் தான்,

அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31 பெண்‌ சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) அவர்களுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவை குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

2 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

3 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

3 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

4 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

4 hours ago