இபிஎஸ் ராஜினாமா செய்யவேண்டும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்.!

Published by
மணிகண்டன்

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திசிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை மற்றும் மருந்து இருப்பு விவரங்களை பற்றி விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி இதுவரை 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் 206, பெண்கள் 12, 1 திருநங்கை ஆவர். இதில் 3 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் . மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதில் 18பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு சென்று பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர். Omeprazole கையிருப்பு இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், உண்மையில், 4.42 கோடி அளவில் இருப்பில் உள்ளது. அது அல்சர் போன்ற நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து.

அதே போல Fomepizole எனும் மருந்து கையிருப்பு இல்லை என கூறினார்.  அது ஒரு ஊசி மருந்து ஆகும். ஒன்றின் விலை 6,700 ரூபாய் ஆகும் . அதனை தமிழக அரசு போதிய அளவு வாங்கி கையிருப்பில் வைத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு தயார் . இதோ நான் கூறுகிறேனே இதுதான் வெள்ளை அறிக்கை.

சேலம் உங்கள் சொந்த மாவட்டம் தான். உங்கள் ஆட்களை அனுப்பி மருத்துவமனைகளில் எவ்வளவு மருந்து இருப்பு இருக்கிறது என விசாரணை செய்ய சொல்லுங்கள். பொய்யான தகவலை கூறி மக்களை பதட்டமான சூழ்நிலைகு உள்ளாக்கி வருகிறார். மருந்துகள் போதிய இருப்பு இல்லாததால் தான் இறப்புகள் அதிகமாகிறது என இபிஎஸ் கூறுகிறார். ஆனால் மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் .

Published by
மணிகண்டன்

Recent Posts

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

10 minutes ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

34 minutes ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

1 hour ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

2 hours ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

2 hours ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

3 hours ago