இபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனை!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்தக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ்க்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை முறையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க  வேண்டும் என்றும் ஆணையிட்டது. இதன்பின், டெண்டர் முறைகேடு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்காததால், மீண்டும் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தனது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில்,  ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதியின் கோரிக்கையை நிராகரித்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இபிஎஸ் மீதான வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.  அதிமுக ஆட்சி காலத்தின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago