பெரியாரை உலகமே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் – சீமான் பேச்சு!
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாகவே பெரியாரை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியாகவே இது பெரியார் மண் இல்லை பெரியாரை எங்களுக்கு மண் தான் என விமர்சித்து பேசி வந்தார். இவருடைய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் எப்போது பெரியாரை எதிர்க்க தான் செய்வேன். நீங்கள் வேண்டுமானால் கொண்டாடுங்க.. ஏத்துக்கோங்க..ஆனால் நான் எப்போதும் எதிர்ப்பேன்.
பெரியார் என்பவர் எங்களுக்கு தேவையில்லை..எனக்கு தேவையில்லை..என்னை பின்பற்றும் பிள்ளைகள் பெரியார் தான் வேண்டும் என்றால் தாராளமாக வெளியேறி போகலாம். சும்மா பெரியார் பெரியார் என்று சொல்லக்கூடாது. திமுகவில் இருப்பவர்கள் பெரியாரை கொண்டாடுவதைவிட்டு விட்டு காந்தியை கொண்டாடுங்கள். எனக்கு தமிழ் மொழி தான் உயிரில். நான் பெரியாரை எதிர்ப்பதற்கு காரணம் தமிழ் மொழியை காண்டுமிராண்டி மொழி, முட்டாள்கள் மொழி என்று கூறியவர் பெரியார். எனவே, அப்படி பேசுபவர்களை ஒலிப்பது தான் என்னுடைய இலக்கு.
பெரியாரை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார் என்றார் யார் சொன்னா? நான் அந்த நாட்டில் வளர்ந்தவன். சுபாஷ் சந்திரபோஸ் படம் எம்ஜிஆர் படம் தான் அவருடைய வீட்டில் இருந்தது. என்னுடைய அண்ணன் எப்போது பெரியாரை பற்றி பேசினார் ? விடுதலை புலிகளை சாகவேண்டும் என்று நினைத்தது திராவிடம் தான்” எனவும் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, சீமான் பற்றி அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர் கேள்விகேட்டார். அதற்கு பதில் அளித்த அவர் ” பெரியார் குறித்து இப்போதுதான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் எப்படி? என சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ என்ற அண்ணாமலையின் கருத்துக்கு சீமான் பதில் அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025