தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி.தங்கவேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி.தங்கவேல், கோவையில் இன்று காலமானார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது.
இதன்காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். கே.தங்கவேல், 2011 முதல் 2016 வரை திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025