மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!

பாஜகவில் இருந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்.
அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த மாணிக்கம், தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளார்.