இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது..! மணிப்பூர் வன்முறை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்..!

Eric Garcetti

மணிப்பூர் வன்முறையை கையாள்வதில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு சூரசந்த்பூரில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, வன்முறையை கையாள்வதில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற வன்முறையில் குழந்தைகள் அல்லது தனிநபர்கள் இறந்தால் கவலைப்படுவதற்கு நீங்கள் இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்தியா உதவி கேட்டால் வன்முறையை கையாள்வதற்கு உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அங்கு விரைவில் அமைதி திரும்புவதற்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

கொல்கத்தாவிற்கு தனது முதல் பயணமாக வந்த எரிக், மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் அமித் மித்ராவின் முதன்மை தலைமை ஆலோசகர் ஆகியோரை சந்தித்து பொருளாதார வாய்ப்புகள், பிராந்திய இணைப்புத் திட்டங்கள், கலாச்சார உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்