தேனியில் டிஐஜி விஜயகுமாருக்கு இறுதிசடங்கு..! தேனி விரைகிறார் டிஜிபி...!

Tamil Nadu DGP Shankar Jiwal rushes to Theni to attend the funeral of Coimbatore DIG Vijayakumar.

Shankar Jiwal

கோவை சரக டிஐஜி விஜயகுமார்  அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தேனி விரைகிறார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்.

இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உடற்கூறாய்வு நடைபெற்று வருகிறது. இவர் சமீப காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  அவர்களின் இறுதி சடங்கு தேனியில் வைத்து நடையபிறவுள்ளது. அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தேனி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.