பாறைகள் குறுக்கிடுவதால் குழி தோண்ட 4 மணி நேரம் நீட்டிக்க வாய்ப்பு ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 39 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது.
அரசுசெய்த பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வர வைக்கப்பட்டுள்ளது.ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது குழி தோண்டும் இடத்தில் 17 அடி தோண்டிய பிறகு பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதம் ஆகிறது .எனவே 100 அடி குழி தோண்ட நான்கு மணி நேரம் கூட ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.