தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டோல் களில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்க கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை விலை மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த ஆண்டு ஏப்ரல்-1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்நிலையில், இன்று (செப்,.1ம் தேதி) முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 28 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வருகிறது. பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
அதன்படி, அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர ரூ.145ல் இருந்து ரூ.160ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .
லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025