பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ.ராமசாமி, இவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார். திராவிடர் கழகத்தை தோற்று வித்தவர் பெரியார். இன்று இவரது 142வது பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் என்றும் புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…