தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது. நேற்று மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா மற்றும் விமானி ஒருவர் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து சாம்பலானது.
ஹெலிகாப்டரில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை அந்த பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நேரில் பார்த்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்த காரணத்தால் மின்சார கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…