மேலும் ஐந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…

Published by
Kaliraj
பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் மேலும் ஐந்து மார்க்கங்களில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது என்றும் அறிவிப்பு.
  1. கயா முதல் சென்னை எழும்பூர் வரை  (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-கயா (02390) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என்றும்,
  2. இதேபோல்,  புவனேஷ்வர் முதல் புதுச்சேரி (வண்டி எண்: 02898) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந் தேதிகளில் மதியம் 12 மணிக்கு புவனேஷ்வரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக புதுச்சேரி-புவனேஷ்வர் (02897) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் புதுச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. இதேபோல், செகந்தராபாத் முதல் திருவனந்தபுரம் ( வண்டி எண்:07230) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 20-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை தினசரி மதியம் 12.20 மணிக்கு செகந்தராபாத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-செகந்தராபாத் (07229) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.
  4. கோரக்பூர்-திருவனந்தபுரம் (02511) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23, 25, 30-ந்தேதி, நவம்பர் மாதம் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29-ந் தேதிகளில் காலை 6.35 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-கோரக்பூர் (02512) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 4, 10, 11, 17, 18, 24, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 1, 2-ந்தேதிகளில் காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
  5. மந்தாதி-ராமேஸ்வரம் (05120) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ஆம் தேதி, நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு மந்தாதி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரம்-மந்தாதி (05119) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 2-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து கவுண்ட்டர்கள் மற்றும் ‘ஆன்-லைனில்’ செய்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

24 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

50 minutes ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

2 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

2 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

3 hours ago