பரபரப்பு.. மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு.!

மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு சென்னை தவிர தமிழகத்தின் மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று உயர் நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். மதுபான கடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. மதுபானங்களில் தீ பிடிக்காததால்பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், மதுக்கடை அருகே இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025