தமிழகத்தில் முதல் பெண் ஜெனரல்.! முதல்வர் வாழ்த்து.. கனிமொழி எம்பி கேள்வி.! இந்திய ராணுவம் புதிய டிவீட்.!

கன்னியகுமாரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார்.
இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தாங்கள் பதிவு செய்த டிவீட்டை டெலிட் செய்தனர். இந்த செயலை குறிப்பிட்டு திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் எதற்காக முதலமைச்சர் வாழ்த்து செய்தி பதிவிட்ட டிவீட்டை டெலிட் செய்தீர்கள் என கேள்வி கேட்டு இருந்தார். என்ன நடந்தது எனவும் இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை @NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?
Why should @NorthernComd_IA delete the tweet of The Chief Minister of Tamil Nadu congratulating the… https://t.co/yoz2KD3jdW
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 2, 2023
இந்நிலையில் இன்று இந்திய ராணுவத்தின் தலைமை பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்து டெலிட் செய்த செய்தியை மீண்டும் பதிவு செய்து கன்னியகுமரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார் என செய்தியை குறிப்பிட்டுள்ளது.
ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பற்றிய செய்திகளை ராணுவ தலைமை தான் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்றும், மாறாக தலைமை தெரிவிக்கும் முன்னர் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்ததால் அந்த டிவீட் டெலிட் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
#HQ IDS congratulates Major General Ignatius Delos Flora of #Indain Army’s Military Nursing Service #MNS on her promotion to prestigious rank of Major General. First woman of #Kanyakumari, #TamilNadu to reach this rank – role model for Women Empowerment.#NationFirst#NariShakti pic.twitter.com/sOXQgV6ksf
— HQ IDS (@HQ_IDS_India) August 3, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025