மணிப்பூரில் அடக்கம் செய்யப்படவிருந்த 35 பேரின் இறுதி சடங்கை ஒத்திவைக்குமாறு உள்துறை அமைச்சகம் கடிதம்..!

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையில் ஏற்கனவே கொல்லப்பட்ட 35 பேரின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட இருந்தது.
அதன்படி, இன்று மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள துய்புவாங்கில் உள்ள அமைதி மைதானத்தில் அடக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆதாரங்களின்படி, 35 பேரில் மூன்று பெண்கள் உள்ளனர், 32 பேர் ஆண்கள் மற்றும் அவர்கள் காலை 11 மணிக்கு அடக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளை ஒத்திவைக்குமாறு பழங்குடியினப் பழங்குடித் தலைவர்கள் மன்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த கடிதத்தில், சமாதானம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, இந்த இறுதி சடங்கை ஒத்திவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று, வன்முறையில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல் அடக்கத்தை மேலும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க பழங்குடியின பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதனையடுத்து, மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள எஸ் போல்ஜாங்கில் உள்ள புதைகுழியை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை பழங்குடியினர் தலைவர்கள் மன்றம், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எழுத்துபூர்வமாக கோரியுள்ளது.
அந்த கோரிக்கைகளின்படி, குகி-ஜோ சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து மலை மாவட்டங்களிலும்,மெய்டேய் மாநிலப் படைகள் நிறுத்தப்படக் கூடாது. சடலங்கள் புதைக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், இம்பாலில் இருக்கும் குக்கி-சோ சமூகத்தினரின் உடல்களை சுராசந்த்பூருக்கு கொண்டு வர வேண்டும். இம்பாலில் உள்ள பழங்குடியின சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்காக, அவர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025