இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில், பாக். கடற்படை தாக்குதலில் குஜராத் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு 68 பேரை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்து ஏற்புடையதல்ல.
நீதிமன்றம் தலையிட்டு 68 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போது, மத்திய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு பேசி வருகிறது. அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் 68 பேரை ஜனவரிக்குள் மீட்டு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…