சுருக்குமடி வலை விவகாரம்.., குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் மீனவர்கள்..!

Published by
murugan

மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் கடல் வளத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் 2-வது நாளான நேற்று திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராட்டம்  நடத்தினர். இதில், ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டார். அப்போது மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர்.

நேற்று இரவு பூம்புகாரில் திருமுல்லைவாசல், மடவா மேடு, சந்திரபாடி பகுதி மீனவர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3-வது நாள் போராட்டத்தை மீனவர்கள் தொடர்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் நடைபயணமாக  சீர்காழி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

4 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

4 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

5 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

6 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

6 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

7 hours ago