school leave updates [file image]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, மீட்புப்பணிகள் நிறைவடையாததால், காஞ்சிபுரத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…