தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுது. இங்கு தேர்வினை எழுத மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி (26) விண்ணப்பித்து இருந்தார். அதன்படி ராமலெட்சுமிக்கு தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.
ஆனால் ராமலெட்சுமிக்கு தேர்வு எழுதுவதற்கு பதிலாக அவரது தங்கை மீனாட்சி(23) தேர்வு எழுதி உள்ளார்.அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் நுழைவு சீட்டில் மீனாட்சி புகைப்படத்தை ஒட்டி தேர்வு எழுதியது தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆள்மாறாட்டம் செய்ததால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகவியல் நிறுவன சங்கம் சார்பில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரின் அரியமங்கலம் போலீசார் மீனாட்சி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…