சென்னைவாசிகள் கவனத்திற்கு; போக்குவரத்து மாற்றம் ..!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீர் தேங்கியுள்ள சாலை:
1. ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
2.மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:
சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பகுல்லா சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என்செட்டிசாலை-வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசூல்லாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டிசாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025