ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட 70 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி ...!

70 school children who ate at a hostel restaurant in Andhra Pradesh have been admitted to hospital.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹாஸ்டல் உணவகத்தில் சாப்பிட்ட 70 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளி ஹாஸ்டலில் உணவு உட்கொண்ட 70 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு உட்கொண்ட பின்பு வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது .

இதனையடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 70 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அனைத்து மாணவர்களின் உடல் நிலையும் தற்போது சீராக உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.