dog

தமிழ்நாடு காவல் துறையில் முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!

By

கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம்

பொதுவாகவே காவல்துறையில் மோப்ப நாய்களை பராமரிக்க ஆண் காவலர்களை தான் நியமிப்பதுண்டு. இந்த நிலையில், முதல்முறையாக தமிழகத்தில் மோப்ப நாய்களை பராமரிக்க 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023