அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னது சர்ச்சையாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமையில் யானைகள் முகாம் நடைபெறுகிறது.இதற்கான நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்பொழுது, அமைச்சர் சீனிவாசன் அங்கு சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது.
அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார்.உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…