மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரும்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னையின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்போடு இருந்து இதனை கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் வியாபாரி ஒருவர் கஞ்சா போதை ஆசாமிகள் தொல்லை தாங்க முடியாமல், தன் கடையை காலி செய்து விட்டார் என்றும், போதை ஆசாமிகளால் முதலில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை முதல்வரால் மீட்டு கொண்டு வர முடியாது. தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி (அதிமுக ஆட்சி) வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்செய்தியாளர்களிடம் கூறினார்.