உயர்கல்வி குறித்து ஆளுநர் கூறுவது தவறான தகவல்.! அமைச்சர் பொன்முடி தகவல்.! 

Ponmudi

ஆளுநர் ரவி தவறான தகவல்களை கூறி வருகிறார் என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 

தமிழக ஆளுநர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் செயல்படும் சென்னை பல்கலைகழகத்தின் கல்வி தரம் குறைந்து விட்டதாகவும், அதனால் 10வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது 100வது இடம் வரை சென்றதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உயர்கல்வி துறை பற்றி தவறான தகவலை ஆளுநர் கூறி வருகிறார் என குற்றம் சாட்டினார். சென்னை பல்கலைக்கழகம் சரவதேச அளவில் 547வது இடத்திலும், இந்திய அளவில் 12வது இடத்திலும் உள்ளது என குறிப்பிட்டார்.

அதே போல் சென்னை மாநில கல்லூரி, நாட்டில் 3வது இடத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்தியாவில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் 53 சதவீதத்தினர் தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் ஆளுநர் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும், சனாதானம் தான் காலாவதியான கொள்கை. திராவிடம் காலாவதியான கொள்கை அல்ல என தெரிவித்த அமைச்சர், தமிழ்நாட்டில் மட்டுமே இருக்க கூடிய திராவிட கொள்கை இனி இந்தியா முவதும் பரவும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்