தென்காசி மாவட்டம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ நைனா முகம்மது மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
தென்காசியில் கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார் நயினா முகமது. பின்னர்ட் 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, 17 ஆண்டுகள் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை நயினா முகமது வகித்து வந்தார்.
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு அளித்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…