நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.
அதன்பின் எஸ்.பி.வேலுமணி, நள்ளிரவில் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று, ஈபிஎஸ் மற்றும் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இன்று அதிமுகவின் உயர்மட்டகுழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…