அனைத்து வகுப்புகளுக்கும் இலவச சைக்கிள்… அமைச்சர் பொன்முடி!

அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இனி தமிழகத்தில் வருங்காலங்களில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க, நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும், 11, 12ம் இலவச சைக்கிளை பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த வருடம் கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தனர். அந்த சமயத்தில், வரும் 2023 – 2024ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, முதல்வரின் உத்தரவுக்கு பிறகு, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு, இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.