ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – அமைச்சர் சிவசங்கர்

Minister Sivashankar

போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக 420 தாழ் தள பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2,271 பேருந்துகள் வாங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், மகளிர் இலவச பயணத்திற்காக நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் வந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உதார்விட்டுள்ள நிலையில், எப்படி தனியார்மயமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து கழகங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, பேசிய அமைச்சர்,  ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகளுக்கு பின்பு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஜூன் 7-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்